“நம்ம பள்ளி, நம்ம ஊரு பள்ளி” (NSNOP) முன்னெடுப்பிற்கான பங்களிப்புகள் 1,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில்இந்த நிதிகள் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக ஆய்வகங்கள், திறன் மிகு வகுப்பறைகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை நிறுவ பயன்படுத்தப்படுகின்றன.
பிரியம்பதா ஜெயக்குமார் எழுதிய "The Man Who Fed India" என்ற வேளாண் அறிவியலாளர் M.S. சுவாமிநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது.
பஞ்சாபைச் சேர்ந்த நமித்பீர் சிங் வாலியா, பிரான்சில் நடைபெற்ற 3வது அன்னேமாஸ் சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்து சதுரங்கப் போட்டிகளின் சர்வதேச மாஸ்டர் (IM) என்ற பட்டத்தினை வென்றார்.
இந்தோனேசிய டென்னிஸ் வீராங்கனை ஜானிஸ் ஜென், WTA (மகளிர் டென்னிஸ் சங்கம்) 250 சென்னை ஓபன் 2025 போட்டியில் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் தோற்கடித்து தனது முதல் வெற்றியைப் பெற்றார்.
2002 ஆம் ஆண்டு பாலி ஓபன் போட்டியில் ஏஞ்சலிக் விட்ஜாஜாவிற்குப் பிறகு, கடந்த 23 ஆண்டுகளில் WTA போட்டிகளில் பட்டத்தை வென்ற முதல் இந்தோனேசிய பெண்மணி இவரே ஆவார்.
18 ஆம் நூற்றாண்டில் சாண்ட்விச்சை (அடுக்கு ரொட்டி) பிரபலப்படுத்திய ஜான் மொன்டாகுவை கௌரவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு உலக சாண்ட்விச் தினம் ஆனது நவம்பர் 03 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.