தமிழ்நாடு முதலமைச்சர் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று சென்னை மாநகராட்சியின் (GCC) துப்புரவுப் பணியாளர்களுக்கான இலவச உணவுத் திட்டத்தை (முதலமைச்சரின் உணவு வழங்கும் திட்டம்) தொடங்கி வைத்தார் என்ற நிலையில்இந்த உணவுத் திட்டமானது டிசம்பர் 06 ஆம் தேதி முதல் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும்.
குஜராத்தின் முக்கிய புனித யாத்திரைத் தலமும் சக்திபீடமுமான அம்பாஜியில் இருந்து வரும் பளிங்குக் கல்லிற்கு, அதன் உயர்தர வெள்ளைக் கல்லுக்காகப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
10வது சர்வதேச கீதை விழாவானது குருக்ஷேத்திரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ஐம்பத்தொரு நாடுகள் பங்கேற்கும் இந்த 2025 ஆம் ஆண்டின் விழாவில் இந்த கொண்டாட்டங்களுக்கான பங்குதாரர் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது.