ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து அதன் அனைத்து விமான நிலையங்களிலும் வைஃபை-7 (அருகலை) தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதில் ஓமன் விமான நிலையங்கள் உலகில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
2B-மும்பை மெட்ரோ வழித்தடத்திற்கான மண்டலே பணிமனை ஆசியாவின் மிகப் பெரிய மெட்ரோ பணி மனையாக திறக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவமானது, இந்தியா-வங்காளதேச எல்லைக்கு அருகில் அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள லச்சித் போர்புகன் இராணுவ நிலையத்தில் மூன்று புதிய அரண் படையையும், பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் மேற்கு வங்காளத்தில் சோப்ரா ஆகிய இடங்களில் ஆதரவுத் தளங்களையும் நிறுவியுள்ளது.
இதனால், தனது எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கான குறுகிய நில இணைப்பான சிலிகுரி வழித் தடம் அல்லது 'கோழிக் கழுத்து வழித் தடம்' அருகே மூன்று புதிய ஆதரவுத் தளங்களுடன் இந்தியா தனது கிழக்குப் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த நெலே அறக்கட்டளையானது, பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் அதன் விரிவான பணிகளை அங்கீகரிப்பதற்காக 2025 ஆம் ஆண்டு மூலத்வா உலக விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில முதல்வர் புதிய வேளாண் துறை முத்திரையையும், "நிலையான வேளாண்மை, வளமான விவசாயி" என்று பொருள்படும் "சஷ்வத் ஷெட்டி, சம்ருத்த ஷேத்காரி" என்ற முழக்கத்தினையும் வெளியிட்டார்.
உலக பயன்பாட்டு தினம் ஆனது நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது என்பதோடு, மேலும் 2025 ஆம் ஆண்டில் பயன்பாட்டுத் திறன், பயன்பாட்டுப் பொறியியல் மற்றும் உலகளாவிய பயன்பாட்டை மேம்படுத்தச் செய்வதற்காக நவம்பர் 13 ஆம் தேதியன்று இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Emerging Technologies and the Human Experience” என்பதாகும்.