வானம்பாடி கவிதை இயக்கக் கவிஞரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான ஈரோடு தமிழன்பன் சமீபத்தில் காலமானார்.
திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட வணக்கம் வள்ளுவம் என்ற கவிதைத் தொகுப்பிற்காக அவர் 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை வென்றார்.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான நீதிபதி R. ஹேமலதாவை தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதித்துறை உறுப்பினராக தமிழக அரசு நியமித்து உள்ளது.
இராணுவப் பயிற்சிகள், அணி வகுப்புகள் மற்றும் விழாக்களில் பயன்படுத்தப்படும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் பகில் இசைக் கருவி புவி சார் குறியீட்டை (GI) பெற்றுள்ளது.
விரைவான விசாரணைகளை உறுதி செய்வதற்கும், பட்டியலிடப்பட்ட சாதியினர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் பஞ்சாப் மாநில பட்டியலிடப் பட்ட சாதியினர் (SC) ஆணையம் இந்தியாவின் முதல் தனி நீதிமன்ற அறையைத் திறந்துள்ளது.
நாகாலாந்து மாநில அரசானது, 2025 ஆம் ஆண்டின் இருவாட்சி திருவிழாவிற்கான உலக நாடுகள் பங்குதாரர்களாக சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகியவற்றினை அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ், ஆல்பாபெட் நிறுவனத்தின் ஜெமினி 3 AI அறிமுகத்திற்குப் பிறகு, ஜெஃப் பெசோஸை விஞ்சி, 238.5 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் மூன்றாவது பணக்காரரானார்.
கேரளா சமீபத்தில் பாம்புக்கடியினால் ஏற்படும் நஞ்சேற்றத்தினை ஒரு அறிவிக்கத் தக்க நோயாக அறிவித்துள்ளது.
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSS) 75வது ஆண்டு விழாவின் நிறைவு விழாவை 2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியன்று உதய்பூரில் நடத்தியது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் சர்வதேச ஆடவர் தினம், ஆண்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து, அவர்களின் உணர்ச்சி, உடல் மற்றும் மன நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Celebrating Men and Boys" என்பது ஆகும்.