TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 26 , 2025 16 hrs 0 min 32 0
  • உள்துறை அமைச்சகமானது, சத்தீஸ்கரில் நக்சல் அமைப்புகளை ஒழிக்கவும், மாவோயிசத்தின் அரசியல் சித்தாந்தத்தை அகற்றவும் 'ககர் நடவடிக்கையினை' தொடங்கியுள்ளது.
  • தாய்லாந்தின் நொந்தாபுரியில் 2025 ஆம் ஆண்டிற்கான 2025 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோவினைச் சேர்ந்த பாத்திமா போஷ் பட்டம் வென்றார்.
  • COP31 (பங்குதாரர்களின் மாநாடு 31) 2026 ஆம் ஆண்டில் துருக்கியினால் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் அறிவு சார் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தச் செய்வதில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக என்று அசிம் பிரேம்ஜி ISB ஆராய்ச்சி ஊக்குவிப்பு விருதைப் பெற்றுள்ளார்.
  • அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தப் பாரம்பரியக் கைவினை கலைஞர்களால் உருவாக்கப் பட்ட கத்தியான டாவோ, புவி சார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற பார்வைத் திறனற்றோருக்கான மகளிர் T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற்றது.
  • வங்க தேசத்தின் டாக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.
  • தகவல், கல்வி, தொடர்பு மற்றும் உலகளாவிய புரிதலில் தொலைக்காட்சியின் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் நவம்பர் 21 ஆம் தேதியன்று உலக தொலைக்காட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்