TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 25 , 2025 2 days 40 0
  • வானம்பாடி கவிதை இயக்கக் கவிஞரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான ஈரோடு தமிழன்பன் சமீபத்தில் காலமானார்.
    • திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட வணக்கம் வள்ளுவம் என்ற கவிதைத் தொகுப்பிற்காக அவர் 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை வென்றார்.
  • ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான நீதிபதி R. ஹேமலதாவை தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதித்துறை உறுப்பினராக தமிழக அரசு நியமித்து ள்ளது.
  • இராணுவப் பயிற்சிகள், அணி வகுப்புகள் மற்றும் விழாக்களில் பயன்படுத்தப்படும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் பகில் இசைக் கருவி புவி சார் குறியீட்டை (GI) பெற்றுள்ளது.
  • விரைவான விசாரணைகளை உறுதி செய்வதற்கும், பட்டியலிடப்பட்ட சாதியினர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் பஞ்சாப் மாநில பட்டியலிடப் பட்ட சாதியினர் (SC) ஆணையம் இந்தியாவின் முதல் தனி நீதிமன்ற அறையைத் திறந்துள்ளது.
  • நாகாலாந்து மாநில அரசானது, 2025 ஆம் ஆண்டின் இருவாட்சி திருவிழாவிற்கான உலக நாடுகள் பங்குதாரர்களாக சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகியவற்றினை அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுள்ளது.
  • கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ், ஆல்பாபெட் நிறுவனத்தின் ஜெமினி 3 AI அறிமுகத்திற்குப் பிறகு, ஜெஃப் பெசோஸை விஞ்சி, 238.5 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் மூன்றாவது பணக்காரரானார்.
  • கேரளா சமீபத்தில் பாம்புக்கடியினால் ஏற்படும் நஞ்சேற்றத்தினை ஒரு அறிவிக்கத் தக்க நோயாக அறிவித்துள்ளது.
  • புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSS) 75வது ஆண்டு விழாவின் நிறைவு விழாவை 2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியன்று உதய்பூரில் நடத்தியது.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் சர்வதேச ஆடவர் தினம், ஆண்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து, அவர்களின் உணர்ச்சி, உடல் மற்றும் மன நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Celebrating Men and Boys" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்