உள்துறை அமைச்சகமானது, சத்தீஸ்கரில் நக்சல் அமைப்புகளை ஒழிக்கவும், மாவோயிசத்தின் அரசியல் சித்தாந்தத்தை அகற்றவும் 'ககர் நடவடிக்கையினை' தொடங்கியுள்ளது.
தாய்லாந்தின் நொந்தாபுரியில் 2025 ஆம் ஆண்டிற்கான 2025 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோவினைச் சேர்ந்த பாத்திமா போஷ் பட்டம் வென்றார்.
COP31 (பங்குதாரர்களின் மாநாடு 31) 2026 ஆம் ஆண்டில் துருக்கியினால் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் அறிவு சார் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தச் செய்வதில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக என்று அசிம் பிரேம்ஜி ISB ஆராய்ச்சி ஊக்குவிப்பு விருதைப் பெற்றுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தப் பாரம்பரியக் கைவினை கலைஞர்களால் உருவாக்கப் பட்ட கத்தியான டாவோ, புவி சார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற பார்வைத் திறனற்றோருக்கான மகளிர் T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற்றது.
வங்க தேசத்தின் டாக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.
தகவல், கல்வி, தொடர்பு மற்றும் உலகளாவிய புரிதலில் தொலைக்காட்சியின் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் நவம்பர் 21 ஆம் தேதியன்று உலக தொலைக்காட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.