தமிழக முதல்வர் கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவைத் திறந்து வைத்தார்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) நிர்வாகத் தலைவராக நீதிபதி விக்ரம் நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
துயரத்தில் உள்ள பெண்களுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக தேசிய மகளிர் ஆணையம் ஆனது 14490 என்ற புதிய கட்டணமில்லா உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
பட்டுப்புழு வளர்ப்பு ஆராய்ச்சி, புதுமை மற்றும் நிலையான பட்டுத் தொழில் மேம்பாட்டில் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக 11வது BACSA சர்வதேச மாநாடு - CULTUSERI 2025 ஆனது ஜார்ஜியாவில் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவை நேட்டோ அமைப்பு சாராத ஒரு முக்கிய நட்பு நாடாக நியமித்து, எதிர்காலத்தில் சவுதி அரேபியாவிற்கு F-35 போர் விமானங்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த அந்தஸ்தைப் பெறும் 20வது நாடாக சவுதி அரேபியா மாறும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பிராந்தியப் பாதுகாப்பிற்காக உறுப்பினர் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக என்று கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அளவிலான கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டமானது கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, கடத்தல் எதிர்ப்பு, இணையவெளி பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகிய ஐந்து துறைகளின் கீழான முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்தது.
புது டெல்லியில் நடைபெற்ற 10வது APDIM அமர்வில், பேரிடர் மற்றும் பருவநிலை அபாயக் குறைப்புக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
சிறந்த இடர் மதிப்பீடு மற்றும் முன் எச்சரிக்கைக்காக ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ளடக்கிய மற்றும் நம்பகமான பேரிடர்-ஆபத்து தரவு நிர்வாகத்தை வலுப்படுத்துவதை இந்த அமர்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
முந்திரிகளில் ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாமிரம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதை எடுத்துக் காட்டும் வகையில் நவம்பர் 23 ஆம் தேதியன்று தேசிய முந்திரி தினம் கொண்டாடப் படுகிறது.