TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 23 , 2026 11 days 74 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • இந்த நீர்த்தேக்கம் சென்னையின் ஆறாவது குடிநீர் மூல ஆதாரமாகவும், இந்த மாநிலத்தின் முதல் கடலோர நன்னீர் நீர்த்தேக்கமாகவும் முன்மொழியப் பட்டு ள்ளது.
  • தமிழ்நாடு அரசின் TNWeSAFE திட்டம், 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பெண்கள் உச்சி மாநாட்டை சென்னையில் ஏற்பாடு செய்ய உள்ளது.
  • மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புதுதில்லியில் நடைபெற்ற இந்தியாவின் முதல் NAMO (நரேந்திர மோடி) புத்தக விழாவில் ‘Gen V Bano’ மற்றும் ‘Mahatma’ ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.
  • கூகுள் நிறுவனமானது, Gemma 3 உள்கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்ட, அதிக மற்றும் குறைந்த வளம் கொண்ட மொழிகள் உட்பட 55 உலகளாவிய மொழிகளை ஆதரிக்கின்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான TranslateGemma எனும் அனைவருக்குமான மொழிபெயர்ப்பு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்திய மாநிலங்களில் 2025 ஆம் ஆண்டில் கேரளாவில் அதிக தனிப்பட்ட நான்கு சக்கர மின்சார வாகன (EV) ஏற்பு பதிவாகியுள்ளது.
  • பாலின உள்ளடக்கிய அமைதிக் காப்புப் படைக்காக இந்திய இராணுவ மேஜர் சுவாதி சாந்த குமார் 2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச் செயலாளர் விருதை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்