TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 25 , 2026 9 days 52 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் பள்ளத்தாக்கில் ஜிங்கிபெரேசி குடும்பத்தைச் சேர்ந்த பராகெம்ப்ஃபெரியா ஆல்பா என்ற புதிய இஞ்சி இனத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
  • தெருநாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமான நடவடிக்கைகளுடன் நிர்வகிக்க பஞ்சாப் அரசு ஆனது லூதியானாவில் அதன் முதல் நாய் சரணாலயத்தைத் திறந்து ள்ளது.
  • இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் மாலத்தீவு அரசினால் நடத்தப் பட்ட DOSTI-17 என்ற 17வது கடலோரக் காவல்படைப் பயிற்சியை நிறைவு செய்தன.
  • மகாராஷ்டிராவின் 11வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் பத்மபாணி விருதைப் பெறும் நபராக மூத்த இசையமைப்பாளர் இளையராஜா தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் போட்டி முறை பாட்மிண்டன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியானது உத்தரக்காண்ட் மாநிலம் ரூர்க்கியில் தொடங்கப்பட்டது.
  • இராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை மையமாகக் கொண்ட தெரு (சமூக) நாய்களுக்கான சிறப்பு கால்நடை வளாகத்தைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
    • இது தமிழ்நாட்டில் தெரு நாய்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்டுள்ள இது போன்ற முதல் மையம் ஆகும்.
  • சூரத்தைச் சேர்ந்த 20 வயது ரோல் பால் தடகள வீரர் யாஷ் அனில் ரஷியா, துபாயில் நடைபெற்ற 7வது ரோல் பால் உலகக் கோப்பை 2025 போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • பத்வாரி டெக்னாலஜிஸின் நிறுவனர் பகுல் லிம்பாசியா, 2026 ஆம் ஆண்டில் உற்பத்தித் திறன் தலைமைத்துவத்திற்கான ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (APO) தேசிய விருதைப் பெற்றார்.
  • இந்திய இராணுவம், ஜம்மு & காஷ்மீர் காவல்துறை (சிறப்புச் செயல்பாட்டுக் குழு உட்பட) மற்றும் மத்திய சேமக் காவல் படை (CRPF) ஆகியவற்றின் ஒரு கூட்டு நடவடிக்கையான ஆபரேஷன் டிராஷி-I ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வாரில் தொடங்கியது.
    • தீவிரவாதிகளை ஒழிப்பது, அவர்களின் மறைவிடங்களை அழிப்பது மற்றும் ஜம்மு பிராந்தியத்திலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு ஊடுருவல் பாதைகளைச் சீர் குலைப்பது இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்