TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 3 , 2026 3 hrs 0 min 25 0
  • மாநில அரசு தமிழ்நாடு ஆனந்த் திருமணப் பதிவு விதிகள், 2026ஐ அறிவித்துள்ளது.
    • பொதுவாக ஆனந்த் கரஜ் என்று அழைக்கப்படும் ஆனந்த் திருமணங்கள், சீக்கிய திருமணச் சடங்குகளின்படி நடத்தப்படுகின்றன.
  • சென்னையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனிமேல் 'வள்ளலார் நெடுஞ் சாலை' என்று அழைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து ள்ளார்.
  • திமுக அரசு தஞ்சாவூரில் உள்ள சோழர் அருங்காட்சியகத்தில் சோழ மன்னர் ராஜ ராஜ சோழனின் 125 அடி உயர சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.
  • கேப்டன் ஹன்சா சர்மா, இந்திய ராணுவத்தில் ஆயுதம் தாங்கிய ருத்ரா ஹெலிகாப்டரை ஓட்டத் தகுதி பெற்ற முதல் பெண் அதிகாரியாக மாறியுள்ளார்.
  • இந்தியா தனது முதல் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட பல்கலைக்கழக முன்னோடித் திட்டத்தை உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் (CCSU) தொடங்கியுள்ளது.
  • உலகம் முழுவதும் சர்வதேச வளர்ச்சிக்கு கனடாவின் பங்களிப்புகளை முன்னிலைப் படுத்தும் வகையில், 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் முழு வாரத்தில் (01-07) சர்வதேச மேம்பாட்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்