TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 24 , 2026 19 hrs 0 min 33 0
  • ஆசியாவிலேயே முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான சிறிய ஆயுதங்கள் மற்றும் இலகுரக ஆயுதங்கள் (SALW) கட்டுப்பாடு குறித்த ஐக்கிய நாடுகளின் தொடக்க பெல்லோஷிப் பயிற்சித் திட்டத்தை இந்தியா நடத்துகிறது.
  • அசாம் மாநிலம் கோலாகாட்டில் மூங்கிலை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் உலகின் முதல் வணிக அளவிலான இரண்டாம் தலைமுறை (2G) உயிரி எத்தனால் ஆலையை பிரதமர் திறந்து வைத்தார்.
  • பீகார் மாநில அமைச்சரவையானது சரண் மாவட்டத்தில் உள்ள சோனேபூரில் ஒரு புதிய சர்வதேச விமான நிலையத்தைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மகாராஷ்டிராவின் வசாய் நகரில் உள்ள 475 ஆண்டுகள் பழமையான அருள் அன்னை கதீட்ரல், 2025 ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ ஆசிய-பசிபிக் கலாச்சாரப் பாரம்பரிய பாதுகாப்பு விருதுகளில் உயரிய நிலை விருதை வென்றுள்ளது.
  • ஜப்பானின் கீழவையானது மகத்தான தேர்தல் வெற்றிக்குப் பிறகு சனே தகைச்சியை மீண்டும் பிரதமராக நியமித்தது என்ற நிலையில் இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜப்பானின் முதல் பெண் பிரதமராக மாறியுள்ளார்.
  • எட்டு வயது ரன்வீர் சச்தேவா, இந்திய AI தாக்க உச்சி மாநாடு 2026 இல் உரையாற்றிய இளம் வயது பேச்சாளராக மாறியுள்ளார்.
  • இந்தியாவின் டாடா குழுமம், நாட்டின் முதல் பெரிய அளவிலான AI தரவு மையத்தை உருவாக்க OpenAI உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
  • நிதி ஆயோக்கின் கீழ் இயங்கும் அடல் புத்தாக்கத் திட்டம் (AIM), அடல் தொழிற்காப்பு மையங்களால் ஆதரிக்கப்படும் 30+ துறைகளில் 45 AI புத்தாக்க நிறுவனங்களை ஆவணப் படுத்தும் ஒரு காபி மேசைப் புத்தகமான AI-Preneurs of India ஐ அறிமுகப் படுத்தியது.
  • தமிழ் மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதியின் நான்காவது தொகுதியை தமிழ்நாடு துணை முதல்வர் சென்னையில் வெளியிட்டார்.
    • நான்காவது தொகுதியானது, மேற்கத்திய இந்தோ-ஐரோப்பிய மொழிகளான லத்தீன், கிரேக்கம், ஜெர்மன், பிரஞ்சு, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம், பாலி மற்றும் சிங்களம் போன்ற கிழக்கு மொழிகளில் 19 தமிழ் மூலச் சொற்களிலிருந்து சொற்களின் வரலாற்று வளர்ச்சியைக் காட்டுகிறது.
  • உலகளாவிய AI அறிவுசார் பந்தய அறிக்கை 2026 ஆனது, செயற்கை நுண்ணறிவில் (AI) அமெரிக்காவை முதலிடத்திலும், சீனா (2வது) மற்றும் சிங்கப்பூர் (3வது) இடத்திலும் தரவரிசைப் படுத்துகிறது.
    • 6வது இடத்தில் உள்ள இந்தியாவானது, திறன்மிக்கோர் தயார்நிலையில் வலுவான நிலையில் உள்ள போதிலும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் பலவீனமாக உள்ளது.
  • திபெத்தியப் புத்தாண்டையும் நெருப்பு குதிரை ஆண்டின் தொடக்கத்தையும் குறிக்கும் வகையில் லோசர் விழா 2026 பிப்ரவரி 18–20 வரை இமாச்சலப் பிரதேசத்தின் மெக்லியோட் கஞ்சில் கொண்டாடப்படுகிறது.
  • சோமி தேசிய தினம் பிப்ரவரி 20, 2026 அன்று மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் கொண்டாடப் பட்டது என்பதோடு இது அதன் 78வது கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.
    • சோமி சமூகத்தின் ஒற்றுமை மற்றும் கலாச்சார அடையாளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நாள் சோமி தேசிய அமைப்பின் உருவாக்கத்தைக் குறிக்கும் வகையில் 1948 இல் முதன்முதலில் அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்