TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 28 , 2026 18 days 91 0
  • இந்தியக் கடற்படையானது சென்னை துறைமுகத்தில் INS Anjadip-ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளது என்பதோடு, இது ஆழமற்றப் பகுதிகளில் செயல்படும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல் (ASW-SWC) திட்டத்தின் கீழ் வரும் மூன்றாவது கப்பலாகும்.
    • கடலோர மற்றும் ஆழமற்ற பகுதிகளில் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிப்பதால் இது " Dolphin Hunter " என்று அழைக்கப்படுகிறது.
  • லைசோசோமால் சேமிப்பு கோளாறு நோய்க்கென அர்ப்பணிக்கப்பட்ட முதல் அரசு ஆதரவு பெற்ற தேசிய உயிரி வங்கியை இந்தியா நிறுவியது.
    • இவ்வகை கோளாறுகள் குறிப்பிட்ட நொதிகளின் குறைபாட்டால் ஏற்படும் மரபு வழி வளர்சிதை மாற்ற நோய்கள் ஆகும்.
  • உலக அரசு சாரா தொண்டு நிறுவன தினம் 2026 பிப்ரவரி 27 அன்று உலக அரசு சாரா நிறுவனங்களின் (NGO) பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு " Restoring Dignity Through Inclusion " என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்