இஸ்ரேலின் மிக உயர்ந்த நாடாளுமன்ற விருதான Speaker of the Knesset Medal விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெருசலேமில் வழங்கப்பட்டது.
திமாப்பூரில் தொடங்கிய வட கிழக்கு வசந்த விழா 2026 ஆனது, பிராந்தியங்களுக்கு இடையிலான கலாச்சாரப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய தக்ஷிணி விழா 2026 உடன் நடத்தப்படுகிறது.
இந்திய விமானப்படையானது லட்சத்தீவு மற்றும் மினிகாய் தீவுக்கூட்டத்தில் Kalari Leap' எனும்பயிற்சியை நடத்தியது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை இந்திய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
"நீதித்துறையில் ஊழல்" பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியதற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வாரியம் (NCERT) வெளியிட்ட 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை இந்திய உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய துரந்த் எல்லைக்கோட்டுப் பகுதியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் Operation Ghazab Lil Haq என்ற தாக்குதலைத் தொடங்கியது.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதின்மூன்று XI வகுப்பு மாணவர்கள், விக்கோ சாட்-1 என்ற 600 கிராம் எடையுள்ள சிறு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவினர்.
விக்கோ சாட்-1, ஐந்து சிறப்பு சென்சார்களைப் பயன்படுத்தி படையடுக்கு மண்டலத்தில் பூஞ்சை வித்துகளைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டது.
ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பிரசந்த் என்ற இலகு ரகப் போர் ஹெலிகாப்டரில் (LCH) பறந்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு மாறியுள்ளார்.
அதியுயர போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள LCH பிரசாந்த்-இல் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் போக்குவரத்துமின்னணுவியல் வசதிகளும் பொருத்தப் பட்டுள்ளது.
இந்திய கணினி அவசரகால பதிலெதிர் நடவடிக்கைக் குழுவானது (CERT-In), செயற்கைக் கோள் தொடர்பு உட்பட விண்வெளிக்கான புதிய இணையவெளி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இந்த வழிகாட்டுதல்கள் ஆனது விண்வெளிப் பிரிவு (செயற்கைக்கோள் மற்றும் கருவிகள்), தரைப் பிரிவு (பணி கட்டுப்பாடு மற்றும் நிலையங்கள்), பயனர் பிரிவு (முனையங்கள் மற்றும் சாதனங்கள்), மற்றும் தொடர்பு இணைப்புகள் (அனுப்புதல் மற்றும் பெறுதல் ) ஆகிய நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், வர்த்தகம், புத்தாக்கம் மற்றும் கூட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும் ஸ்வீடன் ஒரு தீர்மான அறிக்கையில் (SoI) கையெழுத்திட்டது.
பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள் மற்றும் புத்தாக்க மையங்களுக்கான பயணங்களுக்காக ஸ்வீடன்-இந்தியா தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழித்தடம் (SITAC) தொடங்கப்படும்.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் குஜராத்தில் உள்ள சரக்குகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பயன்படுத்தப்படும் ரயில் பாதையின் ஓரத்தில் உள்ள ஒரு குறுகிய பகுதி, உலகளாவிய கார்பன் மதிப்பு வர்த்தக பதிவேடான வெர்ராவின் சரி பார்க்கப் பட்ட கார்பன் தரநிலை (VCS) இன் கீழ் உலகின் முதல் மாதிரி மாற்றப் போக்குவரத்து திட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் கீழ் உள்ள அடல் புத்தாக்கத் திட்டமானது (AIM), இந்தியாவின் முதல் மாநில புத்தாக்க திட்டத்தினை (SIM) திரிபுராவில் தொடங்கியது.
AIM 2.0 இன் ஒரு பகுதியான இந்தத் திட்டமானது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் வலுவானப் புத்தாக்க மற்றும் தொழில்முனைவோர் சூழலமைப்புகளை உருவாக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையானது, பிரிவு 6.4 இன் பாரிஸ் ஒப்பந்த மதிப்பு வர்த்தக செயல்முறையின் (PACM) கீழ் முதல் கார்பன் மதிப்புகளை அங்கீகரித்துள்ளது.
மியான்மரில் ஒரு தூய்மையான சமையல் ஆற்றல் வழங்கும் முயற்சியான இந்த முதல் திட்டம், கொரிய குடியரசுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
ஏப்ரல் 1, 2026 முதல் இந்தியா முழுவதும் குறைந்தபட்ச ஆக்டேன் எண் (RON) 95 உடன் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்வதை இந்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியா ஏற்கனவே 10% எத்தனால் கலப்பை அடைந்து மற்றும் 20% இலக்கை 2025–26 என்பதற்கு முன்கூட்டி நகர்த்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சாலைப் பாதுகாப்பு நிதியமானது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், WHO மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஒரு நீடித்த சாலைப் பாதுகாப்பு நிதித் திட்டத்தைத் தொடங்கியது.
காலநிலை மாற்றம் மற்றும் துருவ கரடிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச துருவ கரடி தினம் பிப்ரவரி 27, 2026 அன்று அனுசரிக்கப் பட்டது.
தினசரி உணவில் புரதத்தின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 27 அன்று தேசிய புரத தினம் அனுசரிக்கப் படுகிறது.