TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 15 , 2026 2 days 95 0
  • அமெரிக்காவின் சியாட்டிலில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது, இந்த சிலையானது அமெரிக்காவில் அவருக்கு வைக்கப்பட்ட முதல் சிலையாகும்.
  • ராஞ்சியில் நடைபெற்ற இந்திய தடகளத் தொடரில் ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தருண் பாயாசிங் 7.46 மீட்டர் தாண்டி வெற்றி பெற்றார்.
  • ராட்டர்டாம் மாரத்தானில் சவான் பர்வால் 2:11:58 என்ற நேரத்தில் பந்தயத்தை முடித்து, 1978 ஆம் ஆண்டில் ஷிவ்நாத் சிங் படைத்த 2:12:00 என்ற இந்தியாவின் பழமையான மாரத்தான் சாதனையை முறியடித்தார்.
  • லக்னோவில் உள்ள இன்டெக்ரல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான AIU தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் வெற்றி பெற்றது.
  • கடற்படை செயல்பாடுகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பை மறு ஆய்வு செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தளபதிகள் மாநாட்டின் 2026 ஆம் ஆண்டின் முதல் பதிப்பை இந்திய கடற்படை புதுடெல்லியில் நடத்த உள்ளது.
  • உலகெங்கிலும் கலையின் வளர்ச்சி, பரவல் மற்றும் ரசனையை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 அன்று உலக கலை தினம் கொண்டாடப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்