தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தின் அடிப்படையில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களை அங்கீகரிக்கும் 2026 ஆம் ஆண்டிற்கான TIME100 பட்டியலை டைம் இதழ் வெளியிட்ட நிலையில் இதில் ஷி ஜின்பிங் (14வது முறை), டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன், இந்திய ஆளுமைகளான சுந்தர் பிச்சை, விகாஸ் கண்ணா மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
கோதுமை மற்றும் நெல்லுக்கான உலகளாவியப் பண்ணை நிலைத்தன்மை மதிப்பீடு (FSA) 3.0 சான்றிதழை பெற்று உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் முதல் நிறுவனமாக ITC நிறுவனம் மாறியது.
குஜராத்தின் தோலேராவில் டாடா குறைக்கடத்தி உற்பத்தி தனியார் துறை நிறுவனத்திற்கான முதல் குறைக்கடத்தி சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு (SEZ) இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். வைஷாலி 2026 ஆம் ஆண்டிற்கான FIDE மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்று, மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டியாளராகத் தகுதி பெற்றுள்ளார்.