அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்க ராணுவப் போர் கல்லூரியின் சர்வதேச புகழவையின் பட்டியலில் 2026 ஆம் ஆண்டில் உபேந்திர திவேதி சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த கௌரவத்தைப் பெறும் மூன்றாவது இந்திய ராணுவத் தளபதி இவராவார்.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை துருக்கி நிறைவேற்றியுள்ளது, இதன்படி யூடியூப் (YouTube), இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களில் வயது சரி பார்ப்பு, பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அகற்றுதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
எவரெடி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனமானது, இந்தியாவின் முதல் கார மின்கலன் உற்பத்தி நிலையத்தை 2026 ஆம் ஆண்டில் ஜம்முவில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.
நீர்ப் பாதுகாப்பு மற்றும் பருவநிலைச் சவால்களுக்கான உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் புதுமையான தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக, 9வது இந்திய சர்வதேச நீர் வாரத்தை (IIWW-2026) புது தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
இது ஜல் சக்தி அமைச்சகத்தால் "Climate Resilient Water Management" என்ற கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலுவலக ஆதரவுப் பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஏப்ரல் 22 அன்று (ஏப்ரல் மாதத்தின் கடைசி முழு வாரத்தின் புதன்கிழமை) நிர்வாகத் தொழில் முறைப் பணியாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.