TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 28 , 2026 3 days 76 0
  • முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே, இந்திய ஆயுதப் படைகளின் அதிகம் அறியப்படாத கதைகள் மற்றும் மரபுகள் குறித்த ‘The Curious and the Classified’ என்ற புனைகதை அல்லாத புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
  • முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் (CEA) அசோக் லஹிரி, சுமன் பெரிக்கு பதிலாக நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
    • போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோபர்தன் தாஸ், இதன் உறுப்பினராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • முதலாம் உலகப் போரில் பங்கேற்ற சுமார் 33,000 இந்திய வீரர்களின் பெயர்கள் ஈராக்கின் பாஸ்ராவில் உள்ள பாஸ்ரா நினைவிடத்தில் டிஜிட்டல் பலகைகள் மூலம் சேர்க்கப் பட்டுள்ளன.
    • நீண்ட காலமாக வரலாற்றில் விடுபட்டிருந்ததைச் சரிசெய்யும் வகையில், காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தால் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • அசாமில் நிலத்தடியில் வாழும் 'கிட்சாக் நகனா' எனப்படும் புதிய பார்வையற்ற மீன் இனம் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    • அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட இது, வடகிழக்கு இந்தியாவில் காணப்பட்ட முதல் நிலத்தடி நீரில் வாழும் மீன் ஆகும்.
  • அன்றாட வாழ்வில் வடிவமைப்பின் முக்கியத்துவம் மற்றும் தாக்கத்தை உணர்த்தும் வகையில் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று உலக வடிவமைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்