தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே அமைந்துள்ள, வங்காள விரிகுடாவை மன்னார் வளைகுடாவுடன் இணைக்கும் பாக் நீர்ச்சந்தியை நீந்திக் கடந்த மிக இளம் வயதினர் என்ற பெருமையை இஷாங்க் சிங் (7) பெற்றுள்ளார்.
சீமென்ஸ் உந்துவிசை அமைப்புடன் நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப் பட்ட 100-வது வந்தே பாரத் ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ரோஹித் ஜெயின் மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்தை குறிவைக்கும் அடுத்த தலைமுறை R78C மலேரியா தடுப்பூசியை உருவாக்க கூட்டு சேர்ந்துள்ளன.
பி.வி. சிந்து தடகள ஆணையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் பேட்மிண்டன் உலக சம்மேளன சபையில் வாக்களிக்கும் உரிமையையும் பெற்று உள்ளார்.
ஆரோக்கியமான உடல் தோற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் குறித்த நேர்மறை மனப்பான்மை, தன்னைத் தானே ஏற்றுக்கொள்வது மற்றும் அனைத்து வகையான உடலமைப்புகளுக்கும் மரியாதை அளிப்பதை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மே 6 ஆம் தேதி சர்வதேச உணவுக்கட்டுப்பாடற்ற தினம் அனுசரிக்கப் படுகிறது.