தெற்கு ரயில்வே 2025-26 ஆம் ஆண்டில் பராமரிப்பு மற்றும் செயல்பாடு (Traction Distribution) செயல்பாடுகளில் தனது சிறப்பான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.
சொத்துக்களின் பழுதுகள் 2024-25 ஆம் ஆண்டில் 13 ஆக இருந்த நிலையில், 2025-26 ஆம் ஆண்டில் 3 ஆகக் குறைந்துள்ளதுடன் தெற்கு ரயில்வேயின் செயல்திறனில் 77% முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
குஜராத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை NH-48-இல், இந்தியாவின் முதல் தடையில்லா பல வழி தடையற்ற கட்டணச் சாவடியை (MLFF) இந்தியா தொடங்கியுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், 2029 ஆம் ஆண்டிற்குள் அனைத்து நான்கு வழி நெடுஞ்சாலைகளிலும் தடையில்லா சுங்கச் சாவடி முறையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
சிறுத்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் தேதி சர்வதேச சிறுத்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆஸ்துமா பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை (2026 ஆம் ஆண்டில் மே 5) அன்று உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Access to anti-inflammatory inhalers for everyone with asthma – still an urgent need" என்பதாகும்.