TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 12 , 2026 2 days 73 0
  • இந்தியப் பத்திரிகையாளர்களான ஆர். கே. ஆனந்த் மற்றும் சுபர்ணா சர்மா ஆகியோர், புளூம்பெர்க்கில் வெளியான பணிக்காக நடாலி ஓபிகோ பியர்சனுடன் இணைந்து, சித்திரச் செய்தியிடல் மற்றும் வர்ணனைப் பிரிவில் புலிட்சர் பரிசை (2026) வென்றனர்.
    • ‘trAPPed’ என்று பெயரிடப்பட்ட இந்த விருது பெற்ற புலனாய்வு அறிக்கை, இந்தியாவில் ஒரு நரம்பியல் நிபுணர் சம்பந்தப்பட்ட இணைய மோசடி மற்றும் “டிஜிட்டல் கைது” மோசடியை வெளிக்கொணர்ந்தது.
  • உலகின் முதல் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியை உருவாக்கியவரும் CNN நிறுவனரான டெட் டர்னர், தனது 87வது வயதில் காலமானார்.
  • ஐதராபாத்தைச் சேர்ந்த ஈயான் ஸ்பேஸ் லேப்ஸ் புத்தொழில் நிறுவனமானது, கண்காணிப்புப் பணிகளுக்காக இந்தியாவின் முதல் ஜெர்மானியமற்ற வெப்ப ஆளில்லா விமான படபிடிப்புக் கருவியான Lumira_E40I50-ஐ அறிமுகப்படுத்தியது.
    • இந்த அமைப்பு ஆளில்லா விமான தளங்களைப் பயன்படுத்தி வான்வழி உளவு மற்றும் கண்காணிப்பு (ISR) பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்