TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 11 , 2026 3 days 82 0
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது, 2026 ஆம் ஆண்டிற்கான GEEF (உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை) உலகளாவிய சுற்றுச்சூழல் மேன்மை விருதுகளில், மெட்ரோ ரயில் பிரிவில் "ஆண்டின் சிறந்த உலகளாவிய சுற்றுச்சூழல் தலைமைத்துவத் திட்டம் 2026" விருதை வென்றுள்ளது.
  • நகர்ப்புற வானிலை முன்னறிவிப்பு மற்றும் பருவநிலை ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் முதல் நகர்ப்புற வானிலை சோதனைத் தளம் மற்றும் காற்றூர்தித் துகள் ஆய்வகம் சென்னையில் தொடங்கப்பட்டது.
  • லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி (பணி நிறைவு) இந்தியாவின் அடுத்த பாதுகாப்புப் படைத் தலைவராக (CDS) நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஜெனரல் அனில் சவுகான் பதவிக்காலம் முடிந்த பிறகு, 2026 ஆம் ஆண்டு மே 30 அன்று பொறுப்பேற்பார்.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட 'இந்தியாவில் தற்செயலான மரணங்கள் மற்றும் தற்கொலைகள் (ADSI) 2024' அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,70,746 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
  • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள டி'எரிங் நினைவு வனவிலங்கு சரணாலயத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் பெங்கால் புலி ஒன்று தென்பட்டது.
  • கருப்பை புற்றுநோய் மற்றும் ஆரம்பகால நோயறிதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று உலக கருப்பை புற்றுநோய் தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "No Woman Left Behind" என்பதாகும்.
  • தாய்மார்கள் மற்றும் தாய்வழி உருவங்களின் அன்பு மற்றும் பங்களிப்பைப் போற்றும் வகையில், 2026 ஆம் ஆண்டு அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான மே 10 அன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்