இந்தியப் பத்திரிகையாளர்களான ஆர். கே. ஆனந்த் மற்றும் சுபர்ணா சர்மா ஆகியோர், புளூம்பெர்க்கில் வெளியான பணிக்காக நடாலி ஓபிகோ பியர்சனுடன் இணைந்து, சித்திரச் செய்தியிடல் மற்றும் வர்ணனைப் பிரிவில் புலிட்சர் பரிசை (2026) வென்றனர்.
‘trAPPed’ என்று பெயரிடப்பட்ட இந்த விருது பெற்ற புலனாய்வு அறிக்கை, இந்தியாவில் ஒரு நரம்பியல் நிபுணர் சம்பந்தப்பட்ட இணைய மோசடி மற்றும் “டிஜிட்டல் கைது” மோசடியை வெளிக்கொணர்ந்தது.
உலகின் முதல் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியை உருவாக்கியவரும் CNN நிறுவனரான டெட் டர்னர், தனது 87வது வயதில் காலமானார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஈயான் ஸ்பேஸ் லேப்ஸ் புத்தொழில் நிறுவனமானது, கண்காணிப்புப் பணிகளுக்காக இந்தியாவின் முதல் ஜெர்மானியமற்ற வெப்ப ஆளில்லா விமான படபிடிப்புக் கருவியான Lumira_E40I50-ஐ அறிமுகப்படுத்தியது.
இந்த அமைப்பு ஆளில்லா விமான தளங்களைப் பயன்படுத்தி வான்வழி உளவு மற்றும் கண்காணிப்பு (ISR) பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.