தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நாட்டின் முதல் மிகப்பெரிய புதிய (greenfield) கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இந்தத் திட்டம் VOYAGES (செயல்திறன் மற்றும் விரிவாக்கத்துடன் கூடிய கப்பல் தளம் சார்ந்த வளர்ச்சிக்கான கூட்டுத் தொலைநோக்குப் பார்வை) எனப்படும் இந்தியா-கொரிய குடியரசு கடல்சார் ஒத்துழைப்பு கட்டமைப்பின் ஒரு பகுதி ஆகும்.
கொலம்பியா மற்றும் பெருவின் மேகக் காடுகளில் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்த 'தத்துரோடென்ட்ரான்' என்ற அரிய வகை மாபெரும் மர இனத்தை ஆண்டிஸ் மலைத்தொடரில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டிற்கான கேம்பிரிட்ஜ் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் விருதுகளில், இந்தியாவைச் சேர்ந்த சோமா மண்டல் தெற்காசிய பிராந்திய விருதை வென்றார்.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் விண்வெளி புத்தொழில் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், 60 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியைத் திரட்டிய பிறகு இந்தியாவின் முதல் விண்வெளி தொழில்நுட்ப யூனிகார்னாக மாறியது.
யூனிகார்ன் என்பது 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு புத்தொழில் நிறுவனமாகும்.
புத்தர் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக சியோலில் உள்ள ஜோகி கோவிலில் தென் கொரியா "காபி" (Gabi) என்ற தனது முதல் மனித உருவ ரோபோ துறவியை அறிமுகப்படுத்தியது.
சுகாதார சேவைகளில் செவிலியர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Our Nurses. Our Future. Empowered Nurses Save Lives" என்பதாகும்.