TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 20 , 2026 12 days 79 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது, அடம்யா வகையைச் சேர்ந்த புதிய தலை முறை அதிவேக ரோந்து கப்பலும் (FPV), எட்டு கப்பல்கள் கொண்ட தொடரின் ஐந்தாவது கப்பலுமான ICGS அச்சலை கோவா கப்பல் கட்டும் தளத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
  • இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரும் எழுத்தாளருமான துஷார் மேத்தா, நகைச்சுவை மற்றும் அசாதாரண நீதிமன்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட தனது The Bench, The Bar and The Bizarre மற்றும் The Lawful and The Awful ஆகிய புத்தகங்களை புது தில்லியில் வெளியிட்டார்.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சூழல்சார் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஸ்வராஜ் த்வீப்பில் (ஹேவ்லாக் தீவு) இரண்டு நீருக்கடியிலான கின்னஸ் உலக சாதனை நிகழ்வுகளை நடத்தின, இதில் ராதா நகர் கடற்கரைக்கு அருகே 60 மீட்டர் × 40 மீட்டர் அளவுள்ள இந்திய தேசியக் கொடியை விரித்த “நீருக்கடியில் விரிக்கப்பட்ட மிகப்பெரிய கொடி” நிகழ்வும் அடங்கும்.
    • மேலும், “நீருக்கடியில் மிக உயரமான மனித அடுக்கு” நிகழ்வின் கீழ், கலங்கரை விளக்கம் பகுதிக்கு அருகே நீருக்கடியில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் மேல் நின்று 10 மீட்டர் உயரமுள்ள அடுக்கை உருவாக்கினர்.
  • மக்களிடையே அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று 'அமைதியுடன் இணைந்து வாழ்வதற்கான சர்வதேச நாள்' அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு “Building Trust through Dialogue, Inclusion and Reconciliation” என்பதாகும்.
  • சமூகத்தில் அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று 'சர்வதேச அருங்காட்சியக தினம்' அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு “Museums Uniting a Divided World” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்