மிசோரம் இஞ்சியின் பதப்படுத்துதல், தர அடையாளப்படுதுதல்/பிராண்டிங் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ₹189.79 கோடி மதிப்பிலான 'மிசோரம் இஞ்சி திட்டத்தை' மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்த திட்டமானது வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் (DONER) ஆதரவுடன் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் இஞ்சி மதிப்புத் தொடர் முழுவதும் மதிப்பு கூட்டுதல், தர அடையாளப் படுத்துதல்/பிராண்டிங், சந்தை ஒருங்கிணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்தத் திட்டத்தில் 1 ஒருங்கிணைந்த பதப்படுத்தும் மையம், 3 உள்கட்டமைப்பு பதப்படுத்தும் மையங்கள் மற்றும் கிட்டத்தட்ட 20,000 விவசாயக் குடும்பங்களை உள்ளடக்கிய 30 க்கும் மேற்பட்ட உத்திசார் தலையீடுகள் இடம் பெற்றுள்ளன.
மிசோரம் இஞ்சியில் 6–8% ஒலியோரெசின் உள்ளது, இது உலகளாவிய சராசரியான 3%-ஐ விட அதிகமாகும்; இதனால் இது உணவு, மருந்து மற்றும் அழகுசாதனத் தொழில்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக அமைகிறது.
மிசோரமின் 'திங்புய் இஞ்சி' மற்றும் 'திங்லைடும் இஞ்சி' ஆகியவை 2021 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு (GI) அங்கீகாரத்தைப் பெற்றன.