மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமானது, தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா-கமல் மௌலா மசூதி வளாகத்தை சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் என்று அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு, இந்த இடத்தில் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளைக் கட்டுப்படுத்திய 2003 ஆம் ஆண்டின் இந்தியத் தொல்லியல் துறை (ASI) உத்தரவை ரத்து செய்தது.
இந்தியத் தொல்லியல் துறையானது 2024 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை இவ்வளாகத்தில் அறிவியல் பூர்வமான ஆய்வை நடத்தியது.
தற்போதைய அமைப்பில் முந்தைய கோயில்களின் பகுதிகள் இருப்பதாக ASI ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
போஜ்சாலா என்பது மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலமாகும்; இது வரலாற்று ரீதியாக சமஸ்கிருதக் கல்வி மற்றும் சரஸ்வதி தேவி வழிபாட்டுடன் தொடர்புடையது.
உச்ச நீதிமன்றம் முன்னதாக இந்த இடத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் (status quo) என உத்தரவிட்டிருந்த அதே வேளையில், ASI ஆய்வைத் தொடர அனுமதித்திருந்தது.