'உலகளாவிய வன இலக்குகள் (GFG) அறிக்கை 2026' ஆனது, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை மற்றும் காடுகள் மீதான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் (UNFF) செயலகத்தால் வெளியிடப்பட்டது.
காடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் உத்திசார் திட்டத்தின் (2017-2030) கீழ் 2030 ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட 6 உலகளாவிய வன இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை இந்த அறிக்கை மதிப்பீடு செய்துள்ளது.
விவசாய விரிவாக்கம் மற்றும் விறகு, கரி ஆகியவற்றிற்கான தேவை அதிகரிப்பு காரணமாக, 2015 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய காடுகளின் பரப்பளவு 40 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
பலவீனமான நிர்வாகம், சட்டவிரோத வர்த்தகம், பாதுகாப்பற்ற நில உரிமை மற்றும் வரையறுக்கப்பட்ட நிறுவன திறன் ஆகியவை நிலையான வன நிர்வாகத்திற்கு முக்கிய தடைகளாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
வறட்சி, வெப்ப அலைகள், காட்டுத்தீ, பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற பருவநிலை தொடர்பான அழுத்தங்களால் காடுகளின் அழிவு அதிகரித்துள்ளது.
காடுகளுக்கான நிதி 2023 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 84 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்றும், இருப்பினும் இது 2030 ஆம் ஆண்டிற்குள் தேவைப்படும் மதிப்பிடப்பட்ட வருடாந்திர தேவையான 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட மிகக் குறைவாக உள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.