TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 22 , 2026 11 days 59 0
  • வெளிநாட்டு அரசாங்கத் தலைவருக்கு வழங்கப்படும் ஸ்வீடனின் மிக உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' விருதினை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.
  • நல்ல அண்டை உறவு மற்றும் நட்புறவு ஒத்துழைப்புக்கான சீன-ரஷ்ய ஒப்பந்தத்தின் (முதலில் 2001-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது) 25வது ஆண்டு நிறைவு, 2026 ஆம் ஆண்டு முழுவதும் நினைவு கூரப்படுகிறது.
  • ஆயுஷ் துறையில் மானிய நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக, ஆயுஷ் கிரிட் /தளம் முன்னெடுப்பின் கீழ் 'ஆயுஷ் அனுதான் இணையவழி தளத்தினை' ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் முதல் தனியார் துறை கடல்சார் எரிவாயு விசையாழி (MGT) உற்பத்தி மையத்தை அமைப்பதற்காக ஆந்திரப் பிரதேச அரசுடன் பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளின் படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்களின் உள்ளடக்கங்களைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு உதவும் வகையில், ட்விட்டர் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தனது 'பேரலல் வெப் சிஸ்டம்ஸ்' புத்தொழில் நிறுவனம் மூலம் "இன்டெக்ஸ்" என்ற தளத்தை அறிமுகப்படுத்தினார்.
  • சமூகத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) மற்றும் டிஜிட்டல் இணைப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் (WTISD) கடை பிடிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Digital lifelines: Strengthening resilience in a connected world" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்