TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 23 , 2026 2 days 48 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமை இயக்குநரால் வழங்கப் படும் மிக உயரிய விருதான அக்ரிகோலா பதக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.
  • சென்னையின் புதிய காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையராக ஜி. எஸ். சமீரன் 2026 ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார்.
  • கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் மணீந்திர அகர்வால், லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அமெரிக்காவின் மத்திய வங்கி அமைப்பான ஃபெடரல் ரிசர்வின் 11வது தலைவராக கெவின் வார்ஷ் பதவியேற்க உள்ளார்.
  • கொரியப் போரின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சியோல் அருகே உள்ள இம்ஜிங்காக் பூங்காவில் இந்தியப் போர் நினைவுச் சின்னத்தை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
  • மதரஸா கல்வி இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவின் மூலம், அரசு உதவி பெறும் அனைத்து மதரஸாக்களிலும் "வந்தே மாதரம்" பாடுவதை மேற்கு வங்காள அரசு கட்டாயமாக்கியுள்ளது.
    • வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்கள் தேசிய கீதமான "ஜன கண மன" உடன் சேர்த்து "வந்தே மாதரம்" பாடலையும் பாட வேண்டும்.
  • LGBTQIA+ மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் வன்முறைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று ஓரினச்சேர்க்கை, இருபால் ஈர்ப்பு மற்றும் திருநங்கையர் மீதான வெறுப்புக்கு எதிரான சர்வதேச தினம் (IDAHOT) அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "At the heart of democracy" என்பதாகும்.
  • தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கையாளர்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக தேனீக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Bee together for people and the planet – A partnership that sustains us all" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்