TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 27 , 2026 3 days 66 0
  • போதைப்பொருள் பழக்கம், மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 1945-ஆம் ஆண்டின் மருந்துகள் விதிகளின் கடுமையான அட்டவணை H1 பிரிவின் கீழ் பிரெகாபாலினை (Pregabalin) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
    • பிரெகாபாலின் நரம்பியல் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது ஆனால் இதனைத் தவறாகப் பயன்படுத்தினால் போதைப் பழக்கம் மற்றும் தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்துவதோடு ஓபியாய்டுகள் அல்லது மதுவுடன் சேர்த்து உட்கொள்ளும் போது கடுமையான சுவாசத் தடையை ஏற்படுத்தலாம்.
  • ராஞ்சியில் நடைபெற்ற கூட்டமைப்பு கோப்பை தடகளப் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10.09 வினாடிகளில் இலக்கை எட்டிய இந்திய ஓட்டப் பந்தய வீரர் குரிந்தர்வீர் சிங், அதிவேக இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலம் 10.0-வினாடி வரம்புக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.
  • இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) தனது முதல் அனைத்து-பெண்கள் எவரெஸ்ட் சிகரப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது, இதில் 11 பெண் மலையேறுபவர்களும் தெற்கு கணவாய் வழித்தடத்தின் மூலம் 8,848 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை அடைந்தனர்.
  • ஒடிசாவில் உள்ள சந்திப்பூரில் ஒருங்கிணைந்தச் சோதனை தளத்திலிருந்து குறுகிய தூரம் சென்று தாக்கும் அக்னி-1 உந்துவிசை எறிகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • உலகெங்கிலும் கலாச்சார பன்முகத்தன்மை, பண்பாட்டுப் பரிமாற்றம், அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று 'உரையாடல் மற்றும் மேம்பாட்டிற்கான உலக கலாச்சாரப் பன்முகத்தன்மை தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
  • பல்லுயிர்ப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 22 அன்று 'சர்வதேச பல்லுயிர் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Acting locally for global impact" என்பதாகும்.
  • காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 25 அன்று 'சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்' கடைபிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்