உள்நாட்டு குறைகடத்தி உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்காக, இந்தியா குறைகடத்தி திட்டம் (ISM) 2.0 இன் செயல்பாட்டுக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவானது, உலகளாவிய குறைகடத்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விநியோகஸ்தர்களாக மாற குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சில்லு/சிப் உற்பத்தி, பொதிகட்டுதல்/பேக்கேஜிங் மற்றும் மூலப்பொருள் விநியோகச் சங்கிலிகள் உட்பட இந்தியாவின் குறைகடத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.
குறைகடத்தி துறையில் தரம், உற்பத்தி அளவு மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த நிறுவனங்களுக்கு இந்த நீண்ட ஊக்கத்தொகை காலம் உதவும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவில் உள்நாட்டு குறைகடத்தி மற்றும் காட்சித்திரை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்தியா குறைகடத்தி திட்டம் தொடங்கப்பட்டது.