ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பின் (RDSO) மூலம் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல அடிப்படையிலான ரயிலை ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இயக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ரயில் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களில் இயங்குகிறது; மேலும் இது டீசல் ரயில்களுக்கு மாற்றாக, பூஜ்ஜிய உமிழ்வு கொண்டதாக செயல்படுவதுடன் நீராவி மற்றும் வெப்பத்தை மட்டுமே துணைப் பொருட்களாக வெளியேற்றுகிறது.
ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JNTBGRI) அறிவியலாளர்கள், செந்தூர்ணி வனவிலங்கு சரணாலயத்தின் ஆற்றங்கரை காடுகளில் ஹம்போல்டியா நைரியானா என்ற புதிய பசுமைமாறா மர வகையை கண்டுபிடித்துள்ளனர்.
ஹம்போல்டியா நைரியானா பருப்பு வகை தாவரக் குடும்பத்தின் ஹம்போல்டியா பேரினத்தைச் சேர்ந்ததாகும்.
கடற்படை துணை அதிகாரியான சஞ்சய் வத்சாயனுக்குப் பதிலாக, கடற்படையின் 48-வது துணைத் தளபதியாக (VCNS) கடற்படை துணை அதிகாரி அஜய் கோச்சார் பொறுப்பேற்றுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனமான நேத்ராசெமி, A2000 எனப் பெயரிடப் பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு (AI) சில்லு அமைப்பை (SoC) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பில் பால் மற்றும் பால் பொருட்களின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலக பால் தினம் ஆண்டுதோறும் ஜூன் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துருப்பொருள் “Celebrating Women Farmers” என்பதாகும்.