TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 2 , 2026 2 days 76 0
  • 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா வென்ற முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை நினைவு கூரும் வகையில், ஹாக்கி வரலாற்று ஆய்வாளர் கே. ஆறுமுகம் எழுதிய India’s First Olympic Gold என்ற புத்தகம் புதுடெல்லியில் வெளியிடப் பட்டது.
  • ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் உலக சாதனை புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
  • கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், மாணவிகளுக்கான மாதவிடாய் ஆரோக்கிய ஆதரவை மேம்படுத்துவதற்காக, அம்மாநில சட்டப்பேரவையின் கொள்கை உரையில் 'மாதவிடாய் கண்ணியத் திட்டம்' என்பதை அறிவித்தார்.
    • இத்திட்டம் கேரளாவில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு மாதத்திற்கு மூன்று நாட்கள் வரை மாதவிடாய் விடுப்பு வழங்க முன்மொழிகிறது.
  • உத்தரப் பிரதேசத்தின் தேசிய சம்பல் சரணாலயத்தில் அடர் பழுப்பு நிற புள்ளி கொண்ட பூனை முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • அடர் பழுப்பு நிற புள்ளி கொண்ட பூனையானது (பிரியோனிலூரஸ் ரூபிகினோசஸ்) ஆசியாவிலேயே மிகச்சிறிய காட்டுப் பூனை இனங்களில் ஒன்று ஆகும்.
  • கஜகஸ்தான் தனது நாட்டின் முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக, ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் உடன் 16.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • கஜகஸ்தான் உலகின் மிகப்பெரிய யுரேனியம் உற்பத்தியாளராகும். மேலும், 2024 ஆம் ஆண்டு நடந்த தேசிய பொதுவாக்கெடுப்புக்கு பின் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
  • ரெட் பலூன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம், இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அடுக்குமண்டல அதி-அழுத்த பலூன் சனா திட்டம் விஜயவாடாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
    • இந்த சாதனையின் மூலம், உள்நாட்டு அடுக்குமண்டல அதி-அழுத்த பலூன் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்