TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 3 , 2026 14 hrs 0 min 39 0
  • ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பின் (RDSO) மூலம் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல அடிப்படையிலான ரயிலை ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இயக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்த ரயில் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களில் இயங்குகிறது; மேலும் இது டீசல் ரயில்களுக்கு மாற்றாக, பூஜ்ஜிய உமிழ்வு கொண்டதாக செயல்படுவதுடன் நீராவி மற்றும் வெப்பத்தை மட்டுமே துணைப் பொருட்களாக வெளியேற்றுகிறது.
  • ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JNTBGRI) அறிவியலாளர்கள், செந்தூர்ணி வனவிலங்கு சரணாலயத்தின் ஆற்றங்கரை காடுகளில் ஹம்போல்டியா நைரியானா என்ற புதிய பசுமைமாறா மர வகையை கண்டுபிடித்துள்ளனர்.
    • ஹம்போல்டியா நைரியானா பருப்பு வகை தாவரக் குடும்பத்தின் ஹம்போல்டியா பேரினத்தைச் சேர்ந்ததாகும்.
  • கடற்படை துணை அதிகாரியான சஞ்சய் வத்சாயனுக்குப் பதிலாக, கடற்படையின் 48-வது துணைத் தளபதியாக (VCNS) கடற்படை துணை அதிகாரி அஜய் கோச்சார் பொறுப்பேற்றுள்ளார்.
  • கேரளாவைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனமான நேத்ராசெமி, A2000 எனப் பெயரிடப் பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு (AI) சில்லு அமைப்பை (SoC) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பில் பால் மற்றும் பால் பொருட்களின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலக பால் தினம் ஆண்டுதோறும் ஜூன் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துருப்பொருள் “Celebrating Women Farmers” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்