2026 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் (OMCs) 48 சில்லறை விற்பனை நிலையங்களில் E85 எரிபொருளை அரசு அறிமுகப்படுத்தியது.
E85 என்பது 80-85% எத்தனால் மற்றும் 14-19% பெட்ரோல் அடங்கிய, நெகிழ்வு-எரிபொருள் வாகனங்களுக்காக (FFVs) பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு எரிபொருளாகும்.
ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனம் ஆனது அந்தமான் ஆழமற்ற கடல் பகுதியில் உள்ள தனது மூன்றாவது ஆய்வுக் கிணறான விஜயபுரம்-3-இல் இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது.
நிலையான செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மவுண்ட் பிளசன்ட்டில் 'ஃபேர்வாட்டர் செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை' 'பில்ட் 2026' நிகழ்வின் போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
ஃபேர்வாட்டர் தரவு மையமானது, மைக்ரோசாப்டின் எதிர்கால நிலையான செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களுக்கான ஒரு முன்மாதிரியாக வடிவமைக்கப் பட்டு உள்ளது.
இந்திய குறைக்கடத்தி திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் குறைக்கடத்தித் திட்டத்திற்காக விசாகப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வீகன் (முற்றிலும் தாவர அடிப்படையிலான) உணவுப் பொருட்களில் அதிகாரப்பூர்வ வீகன் இலச்சினையை 2027 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கட்டாயமாக்கியுள்ளது.
பொது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, விவசாயம், சொத்து மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தொழில்முறை பூச்சி மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 6 ஆம் தேதி உலக பூச்சிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Defending Health Across Borders: The Global Power of Pest Management" என்பதுடன் இதன் முழக்கம் "Marking 10 Years of World Pest Day – United Around the Globe" என்பதாகும்.