TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 20 , 2026 3 days 90 0
  • சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயித்துள்ளது; இதன்மூலம் இத்தகைய விதியை அறிமுகப் படுத்திய முதல் அரபு நாடு என்ற பெருமையை அது பெற்றுள்ளது.
    • 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கவோ, பயன்படுத்தவோ அல்லது இயக்கவோ முடியாது; மேலும் அவர்களால் பதிவிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ, உள்ளடக்கத்தைப் பகிரவோ அல்லது பொதுக் குழுக்களில் இணையவோ முடியாது.
  • திரிபுராவின் பழங்குடியின சமூகங்களின் நரம்பு இசைக்கருவியான 'பாரம்பரிய திரிபுரா சரிந்தா'விற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது; இது அதன் தனித்துவமான கைவினைத்திறன் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்காக அறியப் படுகிறது.
    • இந்த அங்கீகாரத்தின் மூலம், திரிபுரா குயின் அன்னாசிப்பழம், ரிசா, பச்ரா (ரிக்னாய்) மற்றும் திரிபுரா சரிந்தா ஆகிய நான்கு புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளைத் திரிபுரா மாநிலம் தற்போது கொண்டுள்ளது.
  • ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய அரசு விருதான ‘ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ், முதல் வகுப்பு’ எனும் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • முதலைகள் மற்றும் பிற முதலை இனங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17 அன்று உலக முதலைகள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Legacy in Every Scale” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்