சிங்கப்பெண் சிறப்புப் படையின் (SSF) அதிகாரப்பூர்வ உதவி எண்ணாக '1091' என்ற எண்ணை தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
விரைவான தகவல் தொடர்பு மற்றும் அவசரகாலப் பதிலளிப்புக்காக, 1091 உதவி எண் 112 அவசரகால பதிலளிப்பு அமைப்புடன் (ERS) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் மாஜா பகுதியில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால தாமதத்திற்குப் பிறகு, காடியான்-பியாஸ் புதிய ரயில்பாதை திட்டத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளது.
சமூக ரீதியாக விரும்பத்தக்க ரயில் இணைப்புத் திட்டத்தின் கீழ், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காடியானையும், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பியாஸையும் இந்தத் திட்டம் இணைக்கும்.
வளர்ச்சியில் பொதுச் சேவையின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சேவை தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Transforming Public Institutions: Advancing innovation, Participation, and Inclusion என்பதாகும்.
உலகளவில் கைம்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களது உரிமைகளை முன்னிலைப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று சர்வதேச கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Invisible Women, Invisible Problems என்பதாகும்.