நவீன ஒலிம்பிக் இயக்கத்தின் தோற்றத்தை நினைவு கூர்வதையும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது 1948 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தின் செயின்ட் மோரிட்ஸில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) 42வது அமர்வின் போது நிறுவப்பட்டது.
ஜூன் 23 என்ற தேதி, 1894 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் நிறுவனரான பியர் டி குபெர்டின் என்பவரால் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) தோற்றுவிக்கப்பட்ட நாளைக் குறிக்கிறது.
இந்த நாள் நாடுகளுக்கிடையே விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகள் மூலம் சிறந்து விளங்குதல், நட்பு மற்றும் மரியாதை ஆகிய ஒலிம்பிக் மதிப்புகளை ஊக்குவிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு You Can Do This! Let's Move என்பதாகும்.