TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 24 , 2026 10 days 100 0
  • சிங்கப்பெண் சிறப்புப் படையின் (SSF) அதிகாரப்பூர்வ உதவி எண்ணாக '1091' என்ற எண்ணை தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
    • விரைவான தகவல் தொடர்பு மற்றும் அவசரகாலப் பதிலளிப்புக்காக, 1091 உதவி எண் 112 அவசரகால பதிலளிப்பு அமைப்புடன் (ERS) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • பஞ்சாபின் மாஜா பகுதியில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால தாமதத்திற்குப் பிறகு, காடியான்-பியாஸ் புதிய ரயில்பாதை திட்டத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளது.
    • சமூக ரீதியாக விரும்பத்தக்க ரயில் இணைப்புத் திட்டத்தின் கீழ், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காடியானையும், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பியாஸையும் இந்தத் திட்டம் இணைக்கும்.
  • வளர்ச்சியில் பொதுச் சேவையின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சேவை தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Transforming Public Institutions: Advancing innovation, Participation, and Inclusion என்பதாகும்.
  • உலகளவில் கைம்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களது உரிமைகளை முன்னிலைப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று சர்வதேச கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Invisible Women, Invisible Problems என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்