TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 10 , 2026 19 days 133 0
  • உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் உள்ள மார்ஸ்க்-கான்கார் (Maersk–CONCOR) உள்நாட்டு கொள்கலன் முனையத்தில் இந்தியாவின் முதல் EXIM (ஏற்றுமதி-இறக்குமதி) தரத்திலான கப்பல் கொள்கலன் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பீகாரின் முங்கேரில் உள்ள ஓர் ஆலமரம் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப் பட்டுள்ளதுடன் இது உலகின் மிகவும் பழமையான துல்லியமாக வயதறியப் பட்ட ஆலமரமாக அறிவியல் பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ராவில் இந்தியாவின் முதல் புதிய கட்டமைப்புடன் கூடிய ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
  • துன்பத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காக, தேசிய மகளிர் ஆணையம் (NCW) தனது 24×7 செயல்படும் மகளிர் உதவி எண்ணான 14490 ஐ விரிவுபடுத்தியுள்ளது.
    • இந்த உதவி எண் புகாரைப் பதிவு செய்யவும், உளவியல் ஆலோசனை வழங்கவும் மற்றும் டிஜிட்டல் தளம் மூலம் பரிந்துரை ஆதரவை வழங்கவும் வழிவகை செய்கிறது.
  • குடிமக்கள் மைய சேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதிய தொழில்நுட்பங்களை புதுமையாகப் பயன்படுத்தியதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகளில் ICMR-MINDS தங்க விருதை வென்றது.
  • ஊரக வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 ஆம் தேதி உலக ஊரக வளர்ச்சி தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Financing the First Mile of Food Systems" என்பதாகும்.
  • உலகின் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக கிஸ்வாஹிலியை மேம்படுத்தவும், கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடல், அமைதி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி உலக கிஸ்வாஹிலி மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Kiswahili for Peace, Solidarity and Global Economic Diplomacy" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்