TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 8 , 2026 16 hrs 0 min 25 0
  • தலைமைத் தளபதி உபேந்திர திவேதிக்கு பிறகு, ராணுவத் தலைமைத் தளபதியாக (COAS) ஜெனரல் தீரஜ் சேத் 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று 31வது ராணுவத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார்.
  • இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகணையான விக்ரம்-1 இன் முதல் சோதனை ஓட்டமான ஆகமன் திட்டத்திற்கான (Mission Aagaman) ஏவுதல் சாளரத்தை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் அறிவித்துள்ளது.
    • விக்ரம்-1 என்பது 450 கி.மீ உயரத்தில் உள்ள தாழ் புவி சுற்றுப்பாதையில் (LEO) 350 கிலோ வரையிலான சுமைகளை நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல கட்ட ஏவுதல் வாகனமாகும்.
  • ஜப்பானின் மிட்சுபிஷி கேஸ் கெமிக்கல் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 100,000 டன் பசுமை மெத்தனாலை வழங்குவதற்கான இந்தியாவின் முதல் நீண்ட கால உலகளாவிய ஒப்பந்தத்தில் ஆக்மி கிரீன் மாலிகியூல்ஸ் பிசினஸ் என்ற நிறுவனம் கையெழுத்திட்டது.
    • பசுமை மெத்தனால் என்பது புதுப்பிக்கத்தக்க மூலப்பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் குறைந்த கார்பன் எரிபொருளாகும் என்பதுடன் மேலும் இது தொழில் துறைகள் மற்றும் கடல்சார் போக்குவரத்தில் பயன்படுத்தப் படுகிறது.
  • புண்டிபுக்யோ எபோலா வைரஸுக்கான முதல் மூலக்கூறு நோயறிதல் பரிசோதனையை உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் அவசரகாலப் பயன்பாட்டுப் பட்டியலில் (EUL) சேர்த்துள்ளது.
    • புண்டிபுக்யோ எபோலா வைரஸ் என்பது எபோலா வைரஸ் நோயை (EVD) ஏற்படுத்தும் இனங்களில் ஒன்றாகும் என்பதோடு மேலும் இது மிகவும் பொதுவான ஜைர் எபோலா வைரஸிலிருந்து வேறுபடுகிறது.
  • விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 அன்று உலக விலங்கினிருந்து மனிதருக்குப் பரவும் நோய்கள் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "One World, One Health: Prevent Zoonoses” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்