உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் உள்ள மார்ஸ்க்-கான்கார் (Maersk–CONCOR) உள்நாட்டு கொள்கலன் முனையத்தில் இந்தியாவின் முதல் EXIM (ஏற்றுமதி-இறக்குமதி) தரத்திலான கப்பல் கொள்கலன் அறிமுகப்படுத்தப்பட்டது.
பீகாரின் முங்கேரில் உள்ள ஓர் ஆலமரம் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப் பட்டுள்ளதுடன் இது உலகின் மிகவும் பழமையான துல்லியமாக வயதறியப் பட்ட ஆலமரமாக அறிவியல் பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ராவில் இந்தியாவின் முதல் புதிய கட்டமைப்புடன் கூடிய ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
துன்பத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காக, தேசிய மகளிர் ஆணையம் (NCW) தனது 24×7 செயல்படும் மகளிர் உதவி எண்ணான 14490 ஐ விரிவுபடுத்தியுள்ளது.
இந்த உதவி எண் புகாரைப் பதிவு செய்யவும், உளவியல் ஆலோசனை வழங்கவும் மற்றும் டிஜிட்டல் தளம் மூலம் பரிந்துரை ஆதரவை வழங்கவும் வழிவகை செய்கிறது.
குடிமக்கள் மைய சேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதிய தொழில்நுட்பங்களை புதுமையாகப் பயன்படுத்தியதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகளில் ICMR-MINDS தங்க விருதை வென்றது.
ஊரக வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 ஆம் தேதி உலக ஊரக வளர்ச்சி தினம் அனுசரிக்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Financing the First Mile of Food Systems" என்பதாகும்.
உலகின் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக கிஸ்வாஹிலியை மேம்படுத்தவும், கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடல், அமைதி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி உலக கிஸ்வாஹிலி மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Kiswahili for Peace, Solidarity and Global Economic Diplomacy" என்பதாகும்.