TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 14 , 2026 15 days 133 0
  • பிட்ஸ் பிலானியைச் (பிட்ஸ் பிலானி (பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம்) சார்ந்த அறிவியலாளர்கள், IBM குவாண்டம் நிறுவனத்துடன் இணைந்து, பாரம்பரியக் கணினிகளை விடச் சிறந்ததாகச் செயல்படும் குவாண்டம் நெறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
  • பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (JNCASR) ஆராய்ச்சியாளர்கள், இயந்திர திரிபைப் பயன்படுத்தி உலோகங்களின் ஒளியியல் பண்புகளை மாற்ற முடியும் என்பதை முதல்முறையாக நிரூபித்துள்ளனர்.
    • இயந்திர உருமாற்றத்தின் மூலம் உலோகத்தின் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் ஒளியுடனான அதன் தொடர்பைக் கட்டுப்படுத்தும் உலோகங்களின் பிளாஸ்மான் அதிர்வுப் பண்பை மாற்றியமைக்கலாம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.
  • 2026-27 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒப்புதல் அளித்துள்ளதுடன் இதில் நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 இடங்களை கூடுதலாக ஒதுக்கியுள்ளன.
  • ஒடிசாவில் உள்ள சண்டிப்பூர் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ITR) பினாகா தொலை தூர வழிகாட்டப்பட்ட எறிகணையை (LRGR) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • PROTAC (புரதச்சிதைவு-இலக்கு கைமேரா) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் சிகிச்சையான 'வெப்டெஜெஸ்ட்ரண்ட்' (vepdegestrant) மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஒப்புதல் அளித்துள்ளது.
    • அர்வினாஸ் மற்றும் ஃபைசர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஒரு வாய்வழி மருந்தான வெப்டெஜெஸ்ட்ரண்ட் ESR1-பிறழ்வு கொண்ட, ER-நேர்மறை (ஈஸ்ட்ரோஜன் ஏற்பி-நேர்மறை) மற்றும் HER2-எதிர்மறை வகை மேம்பட்ட மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்