TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 2 , 2026 3 days 34 0
  • அசாம் மாநிலம் தனது முதல் சர்வதேச 'புராபி ஐஸ்கிரீம்/பனிக்கூழ்' (Purabi Ice Cream) தொகுப்பை பூட்டானுக்கு ஏற்றுமதி செய்துள்ளதுடன் இது அம்மாநில பால்வளத் துறையில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
  • வரியற்றப் பணியாளர் நலன்களுக்காக இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) அடிப்படையிலான ஃப்ளெக்ஸி பெனிஃபிட்ஸ் வாலட்டை (Flexi Benefits Wallet) OmniCard நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்த வாலட் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உரிமம் பெற்ற 'முன்பணம் செலுத்தும் கருவித்' (PPI) தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் UPI ஸ்கேன்-அண்ட்-பே பரிவர்த்தனைகளை ஆதரிக்கிறது.
  • நேபாளத்தின் லலித்பூரில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ குஸ்தல் மகாவிஹார் மற்றும் பிரதம் ஸ்ரீ மகாவிஹாரின் ஆகம் ஆகியவற்றை இந்தியாவும் நேபாளமும் கூட்டாகத் திறந்து வைத்தன.
    • ஸ்ரீ குஸ்தல் மகாவிஹார் மற்றும் பிரதம்ஸ்ரீ மகாவிஹாரின் ஆகம் ஆகியவை நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள பதான் (லலித்பூர்), குய்டா டோலில் அமைந்துள்ள பழமையான பௌத்த பாரம்பரிய அமைப்புகளாகும்.
  • தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதற்கும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உலக தாய்ப்பால் வாரம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Breastfeeding for a Sustainable Start in Life: Strengthen What Works என்பதாகும்.
  • உலகளாவிய இணைய வலையின் (WWW) கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய தகவல்தொடர்புகளில் அதன் தாக்கத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 அன்று உலகளாவிய இணைய வலை தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • உலகளாவிய இணைய வலை (WWW) 1989 ஆம் ஆண்டில் சர் டிம் பெர்னர்ஸ்-லீ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இது 1991 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்