TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 5 , 2026 5 hrs 0 min 22 0
  • 2026 ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டெகாத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், காமன் வெல்த் போட்டிகளில் இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தேஜஸ்வின் சங்கர் பெற்றுள்ளார்.
  • கேரளாவின் விழிஞ்சியம் சர்வதேசத் துறைமுகமானது ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) சரக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (CBIC) சுங்கத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
    • 2024 ஆம் ஆண்டு ஜூலையில் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய இத்துறைமுகம், முன்னதாக கப்பல்களுக்கு இடையே சரக்கு பெட்டகங்களை மாற்றுவதற்கான சர்வதேச பரிமாற்ற மையமாக மட்டுமே செயல்பட்டது.
  • இந்தியக் கடற்படையானது ஐந்தாவது மூழ்குப் பணி ஆதரவுக் கப்பலை (DSC A24) கொல்கத்தாவில் உள்ள திட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (TRSL) அறிமுகப்படுத்தியது.
    • மூழ்குப் பணி ஆதரவுக் கப்பல்கள் (DSC) என்பவை கடலோர மற்றும் துறைமுகப் பகுதிகளில் நீருக்கடியில் மூழ்கும் செயல்பாடுகள், ஆய்வுகள், பழுதுபார்த்தல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு கப்பல்களாகும்.
  • உத்தரப் பிரதேசத்தின் காசியில் (வாரணாசி) விக்சித் பாரத் சங்கல்ப் அபியானுக்கான நாஷா முக்த் யுவா என்ற 100 வாரகால நாடு தழுவிய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
    • இப்பிரச்சாரம் முதன்முதலில் காசியில் சோதனைத் திட்டமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் காசி பிரகடனத்தின் (2025) கீழ் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
  • உலகெங்கிலும் உள்ள நிதித் தொழில்நுட்பத்தில் (FinTech) ஏற்படும் புதுமைகள் மற்றும் முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக நிதித் தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்