TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 9 , 2026 4 days 50 0
  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சுடும் தளத்தில் 'ROTOR CLAP III' என்ற பயிற்சியை இந்திய விமானப்படை (IAF) நிறைவு செய்தது.
  • -42°C வரையிலான அதீத குளிரான சூழ்நிலைகளிலும் செயல்படும் வகையில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதீத வானிலைக்கான தரம் (XWG) கொண்ட டீசலை இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியது.
  • இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள தௌலாதர் வனவிலங்கு சரணாலயத்தில் முதல்முறையாக ஒரு பனிச் சிறுத்தை (Panthera uncia) தென்பட்டு உள்ளது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதான பொறியியல் கல்வியாளரான நாதன் தாமஸ், தனது 18 வயது மற்றும் 346 நாட்களில் உலகின் மிக இளைய ஆண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்று, 306 ஆண்டுகள் பழமையான கின்னஸ் உலக சாதனையை முறியடித்தார்.
  • தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
  • நாகாலாந்தில் வேகமாகப் பாயும் லிகிம்ரோ நதியில் புதிய வகையைச் சார்ந்த நன்னீர் கெளுத்தி மீன் (சூடெசெனீஸ் லிகிம்ரோயென்சிஸ்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நதியின் பெயரே அதற்குச் சூட்டப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்