TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 19 , 2026 7 days 131 0
  • கர்நாடகாவின் மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 'காடியானா கர்நாடகா' (Ghatiana karnataka) என்ற புதிய நன்னீர் நண்டு இனம் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.
    • காடியானா கர்நாடகா என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் பதிவு செய்யப்பட்ட காடியானா பேரினத்தின் 15 வது இனமாகும், மேலும் இது கர்நாடகாவில் மட்டுமே காணப் படக்கூடிய இனங்களில் ஒன்றாகும்.
  • பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் உள்ள இந்தியா ஆப்டெல் லிமிடெட் (IOL) நிறுவனமானது, டேராடூனில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'கருட்' (GARUD) உயர் திறன் கொண்ட தொலைநோக்கிகளை குடிமக்கள் வணிகம் செய்யும் சந்தைக்காக அறிமுகப் படுத்தியுள்ளது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த Together AI நிறுவனத்திற்காக NVIDIA B300-ஐ அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழிற்சாலையைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றைத் தொகுப்பு செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு வசதியை சென்னையில் அமைப்பதற்காக லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனம் ₹10,000–15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
  • லிபியாவின் பெங்காசி நகரில் நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை ஸ்கைடைவிங்கில், 38 நாடுகளைச் சேர்ந்த 65 ஸ்கைடைவர்களுடன் இந்தியாவைச் சேர்ந்த மூன்று ஸ்கைடைவர்களான ஜம்ஷீர் தனலோட் (கேரளா), அபிஷேக் ராவத் (உத்தரப் பிரதேசம்) மற்றும் இஷா ராஜ் (பீகார்) ஆகியோர் பங்கேற்றனர்.
  • சென்னையைச் சேர்ந்த அஹீசா டிஜிட்டல் இன்னோவேஷன்ஸ் (Aheesa Digital Innovations) நிறுவனம், மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தால் (C-DAC) உருவாக்கப்பட்ட 64-பிட் வேகா (VEGA) செயலியால் இயக்கப்படும் மற்றும் RISC-V கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உள்நாட்டு அகலப்பட்டை சிஸ்டம்-ஆன்-சிப் (SoC) 'விஹான்'-க்கான (VIHAAN) முதல்-கட்ட சிலிக்கான் வெற்றியை (first-pass silicon success) எட்டியுள்ளது.
  • இந்தியாவின் முதல் மெய்நிகர் உயிரியல் பூங்காவானது, 14-D சினிமா மற்றும் மெய்நிகர் காடுகளின் வனவிலங்கு உலா ஆகியவற்றுடன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் உயிரியல் பூங்காவில் திறக்கப்பட்டுள்ளது.
  • இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை மேம்படுத்துவதற்காக, தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சைபர் குஷ்தி 2026 (CYBER KUSHTI 2026) ஹேக்கத்தானைத் தொடங்கியது.
    • தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அறிவியல் அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்