TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 1 , 2026 6 days 106 0
  • தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) மூலம் உருவாக்கப் படவுள்ள இந்தியாவின் முதல் பிரத்யேக குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழக வளாகத்தை அமராவதியில் அமைக்க ஆந்திரப் பிரதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • கடலோரக் கண்காணிப்பு, மீன்வளப் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL) நிறுவனம் ICGS அஜித் கப்பலை இந்தியக் கடலோரக் காவல்படையிடம் (ICG) ஒப்படைத்தது.
  • தரை நிலையங்களுடனான அதிவேக தகவல் தொடர்புக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் மற்றும் ESA விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனோட் ஆகியோர் புதிய Ku-பேண்ட் ஆண்டெனாவை நிறுவி உள்ளனர்.
  • விசாகப்பட்டினத்தில் உள்ள அமானாம் கிராமத்தில் AM AI தொழிற்சாலையின் ₹31,387 கோடி மதிப்பிலான 512 மெகாவாட் பசுமை செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்திற்கு ஆந்திரப் பிரதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • பழங்குடியினர் நலத் திட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை வழங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டான 'ஜாகோ' (Jago) என்பதை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் ஏலூர் மாவட்டம் முசுனூருவில் இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்படாத (non-GMO) அதிக அளவு விரியும் பாப்கார்ன் மக்காச்சோள கலப்பின விதையை குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அறிமுகப் படுத்தினார்.
    • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தக் கலப்பினம், அதிக அளவு விரியும் பாப்கார்ன் உற்பத்திக்காக கோர்மெட் பாப்கார்னிகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • சென்னை அருகே காட்டுப்பள்ளியில் லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தால் கட்டப் பட்ட தனது முதல் உள்நாட்டு பல்நோக்கு கப்பலான 'சமர்த்தக்' கப்பலை இந்திய கடற்படை பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்