TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 11 , 2026 2 days 31 0
  • கூகுள் நிறுவனம் தனது கூகுள் டீப்மைண்ட் ஆந்த்ரோகிருஷி குழுவின் மூலம் இந்தியாவின் முதல் விவசாய செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை அறிமுகப் படுத்தியுள்ளது, இதில் விவசாய நிலங்களை வரைபடமாக்குதல் மற்றும் நிலப் பகுப்பாய்விற்கான விவசாய நிலப்பரப்பு புரிதல் (ALU) ஆகியவை அடங்கும்.
    • விவசாயக் கண்காணிப்பு மற்றும் நிகழ்வு கண்டறிதல் (AMED) மூலம் பயிர் நிலைமைகள், நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் மற்றும் விவசாய நிகழ்வுகளை பெரிய அளவில் கண்காணிக்கிறது.
  • இந்தியா-ஜப்பான் இடையேயான இருதரப்பு விமானப்படை பயிற்சியான வீர் கார்டியன்-2026 ஆனது ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடத்தப்படுகிறது.
  • கோவாவின் தலிகாவோவில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் கோவா காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் காவல்துறை வண்ண விருது வழங்கப்பட்டது.
    • குடியரசுத் தலைவரின் காவல்துறை வண்ண விருதைப் பெறும் இந்தியாவின் ஐந்தாவது மாநிலக் காவல்துறை என்ற பெருமையை கோவா காவல்துறை பெற்று உள்ளது.
  • வியட்நாமின் கான் ஹோவாவில் உள்ள நா ட்ராங்கில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா 2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.
  • உடல் சிகிச்சையின் முக்கியத்துவம் மற்றும் மறுவாழ்வு, இயக்கம், வலி மேலாண்மை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அதன் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலக உடல் சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “the role of physiotherapy and physical activity in the prevention, management, and rehabilitation of cardiovascular disease and stroke” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்